உளுந்தூர்பேட்டையில் 4 ஏக்கரில் கட்டப்படவுள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் பூமி பூஜை…..எடப்பாடி அடிக்கல் நாட்டினார்

உளுந்தூர்பேட்டை,

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் 4 ஏக்கரில் கட்டப்படவுள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் பூமி பூஜையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு இன்று அடிக்கல் நாட்டினார்.

ஆந்திராவில் உள்ள ஏழுமலையான் கோவிலைப்போல நாட்டின் பல இடங்களில் கோவில்களை அமைக்க திருப்பதி தேவஸ்தான் திட்டமிட்டு கோவில்களை கட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தின் கன்னியாகுமரியில் ஏழுமலையான் கோவில் கட்டப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து,

ளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் ஏழுமலையான் கோவில் கட்ட தீர்மானிக்கப்பட்டது. அதற்கான 4 ஏக்கர் நிலத்தினை உளுந்தூர்பேட்டை அண்ணா தி.மு.. எம்.எல்.. குமரகுரு வழங்கினார். அதனை கடந்த ஆண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேவஸ்தான அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். இதனை தொடர்ந்து கோவில் கட்டுவதற்காக 1 கோடி ரூபாய் தேவஸ்தானத்துக்கு குமரகுரு நன்கொடையாக வழங்கினார்.

அதைத்தொடர்நது கோவில் கட்டுவதற்காக நிர்வாக ரீதியிலான அனுமதி கோரி ஆந்திர முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதினார். இந்த நிலையில் உளுந்தூர்பேட்டையில் கட்டப்படவுள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுவாமி திருக்கோவில் பூமி பூஜையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு கல்வெட்டினை திறந்து வைத்தார். 50க்கும் மேற்பட்ட பட்டாச்சாரியார்கள் முன்னிலையில் யாக சாலை பூஜைகள் நடைபெற்றன.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், எம்.சி. சம்பத், திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழுத் தலைவர் ஓய்.வி. சுப்பா ரெட்டி, எம்.எல்..க்கள் ஆர்.குமரகுரு, .பிரபு, மாவட்ட கலெக்டர் கிரண் குராலா, உளுந்தூர்பேட்டைஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தின் தலைவர் ஆனந்தானந்தஜி மகராஜ், திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து பெருமாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிப்பட்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) லிமிடெட் சார்பில் உளுந்தூர்பேட்டைதிருப்பதி புதிய வழித்தடத்தில் பேருந்து சேவையினை இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

 

Translate »
error: Content is protected !!