“என்ன திட்டமா இருக்கும்”…. தேமுதிகவுக்கு 60 தொகுதிகளை ஒதுக்கிய தினகரன்…!

சென்னை,

டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி ஒரு விஷயத்தில் மிகவும் தெளிவாக இருக்கிறது.

எந்த பாடுபட்டது அதிமுகவை வீழ்த்திவிட வேண்டும் என்பதுதான் அதன் ஒரே குறிக்கோளாக இருக்கிறது. அடுத்தடுத்து அந்த கட்சியை எடுத்து வைக்கக்கூடிய மூவ்கள் அதைத்தான் உறுதிப்படுத்துவதாக இருக்கிறது.

அசாதுதீன் ஓவைசி கட்சியுடன், தினகரன் திடீரென கூட்டணி வைத்ததை யாரும் எதிர்பார்க்கவில்லை. இஸ்லாமியர்கள் கணிசமாக வசிக்கக்கூடிய தொகுதிகள் ஓவைசி கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 3 தொகுதிகளில் அந்த கட்சி போட்டியிடுகிறது.

இன்னொரு பக்கம் எஸ்டிபிஐ கட்சியுடனும் தினகரன் கட்சி கூட்டணி வைத்துள்ளது. இந்த கட்சிக்கும் இஸ்லாமியர்கள் கணிசமாக உள்ள தென் மாவட்டங்களின் பல பகுதிகளில் இடங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான், அதிமுக கூட்டணியில் இருந்து பிரிந்த விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக, தற்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கூட்டணியுடன் இணைந்துள்ளது.

தேமுதிக கட்சிக்கு 60 தொகுதிகளை ஒதுக்கியுள்ளார் தினகரன். இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது, ரிஷிவந்தியம், விருதாச்சலம் உள்ளிட்ட வட தமிழகத்தின் பல தொகுதிகளை, குறிப்பாக தேமுதிக வலுவாக இருப்பதாக நம்பும் தொகுதிகளை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஒதுக்கியுள்ளது.

தென் தமிழகத்தில், ராதாபுரம், கன்னியாகுமரி மாவட்டத்தின் குளச்சல், விளவங்கோடு உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த சில தொகுதிகள் தேமுதிகவுக்கு கிடைத்துள்ளன. அதிமுக கூட்டணியில் ராதாபுரம் சட்டசபை தேர்தலை எதிர்கொண்டு ஒருமுறை தேமுதிக வெற்றி பெற்றது.

எனவே தங்களுக்கு வாக்கு வங்கி அங்கு இருப்பதாக நம்பி அந்த தொகுதியை கேட்டு பெற்றுள்ளது தேமுதிக. இதில் கவனிக்கப்பட வேண்டிய அம்சம் என்னவென்றால், மதுரை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் டிடிவி தினகரனுக்கு செல்வாக்கு இருப்பதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியினர் நம்புகிறார்கள்.

இதன் காரணமாகத்தான் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறார் தினகரன். தென் மாவட்டத்தின் மையப்பகுதியில் இருந்தபடி அங்கு உள்ள தனது வாக்கு வங்கியை அதிமுகவுக்கு செல்ல விடாமல் தடுப்பது தினகரன் திட்டமாக இருக்கிறது.

அதே நேரம், வன்னியர்கள், கவுண்டர்கள் உள்ளிட்டோர் பெரும்பான்மையாக உள்ள வட மாவட்டங்களில் அதிமுகவுக்கு செல்லும் வாக்குகளை பிரிப்பதற்கு, தேமுதிக பயன்படும் என்பது அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் திட்டமாக இருக்கிறது.

அதிமுகவுக்கு செல்லக்கூடிய இஸ்லாமியர்கள் வாக்குகளை பிரிப்பதற்கு ஓவைசி மற்றும் எஸ்டிபிஐ கட்சி பயன்படும் என்பதும் தினகரனின் தேர்தல் வியூகம் என்கிறார்கள் தேர்தல் பார்வையாளர்கள்.

வடக்கே தேமுதிக, தெற்கே அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என இணைந்து அதிமுக வாக்குகளை பிரிப்பது முக்கிய இலக்கு என்பது அவர்கள் வியூகமாக இருந்தாலும் இது தேர்தல் களத்தில் பலனளிக்குமா. மக்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிப்பதா, அல்லது தனிப்பட்ட தலைவர்களுக்காக புதிய சின்னத்தை அவ்வளவு எளிதாக மக்கள் ஏற்பார்களா என்பதெல்லாம் ஏப்ரல் 6ம் தேதி தெரியவரும்.

தேமுதிக தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள்:-

1.கும்மிடிப்பூண்டிகே.எம்.டில்லி

2.திருத்தணிடி.கிருஷ்ணமூர்த்தி

3.ஆவடிநா.மு.சங்கர் 

4.வில்லிவாக்கம்சுபமங்களம் டில்லிபாபு

5.திரு.வி. நகர் (தனி) – .பி.சேகர்

6.எழும்பூர் (தனி) – டி.பிரபு

7.விருகம்பாக்கம்பா.பார்த்தசாரதி

8.சோழிங்கநல்லூர்ஆர்.பி.முருகன்,

9.பல்லாவரம்டி.முருகேசன்

10.செய்யூர் (தனி) – .சிவா

11.மதுராந்தகம் (தனி) – என்.மூர்த்தி

12.கே.வி.குப்பம் (தனி) – பி.தனசீலன்,

13.ஊத்தங்கரை (தனி) – ஆர்.பாக்யராஜ்

14.வேப்பனஹள்ளிஎஸ்.எம்.முருகேசன்

15.பாலக்கோடுபி.விஜயசங்கர்

16.பென்னாகரம்ஆர்.உதயகுமார்

17.செங்கம் (தனி) – எஸ்.அன்பு

18.கலசப்பாக்கம்எம்.நேரு

19.ஆரணிஜி.பாஸ்கரன்

20.மயிலம்.சுந்தரேசன்,

21.திண்டிவனம் (தனி) – கே.சந்திரலேகா,

22.வானூர் (தனி) – பி.எம்.கணபதி, 23.திருக்கோவிலூர்எல்.வெங்கடேசன்

24.கள்ளக்குறிச்சி (தனி) – என்.விஜயகுமார்

25.ஏற்காடு (பழங்குடியினர் தனி) – கே.சி.குமார்

26.மேட்டூர்எம்.ரமேஷ் அரவிந்த்

27.சேலம் மேற்குஅழகாபுரம் ஆர்.மோகன்ராஜ்

28.நாமக்கல்கே.செல்வி

29.குமாரபாளையம்கே.ஆர்.சிவசுப்பிரமணியன்

30.பெருந்துறைபி.ஆர்.குழந்தை வேலு

31.பவானி சாகர் (தனி) – ஜி.ரமேஷ்

32.கூடலூர் (தனி) – .யோகேஸ்வரன்

33.அவிநாசி (தனி) – எஸ்.மீரா

34.திருப்பூர் வடக்குஎம்.செல்வகுமார்

35.வால்பாறை (தனி) – எம்.எஸ்.முருகராஜ்

36.ஒட்டன்சத்திரம்பா.மாதவன்

37.நிலக்கோட்டை (தனி) – கே.ராமசாமி

38.கரூர்.ரவி

39.கிருஷ்ணராயபுரம் (தனி) – எம்.கதிர்வேல்

40.மணப்பாறைபி.கிருஷ்ணகோபால்

41.திருவெறும்பூர்எஸ்.செந்தில்குமார்

42.முசிறிகே.எஸ்.குமார்

43.பெரம்பலூர் (தனி) – கே.ராஜேந்திரன்

44.திட்டக்குடி (தனி) – ஆர்.உமாநாத்

45.விருத்தாச்சலம்பிரேமலதா விஜயகாந்த்

46.பண்ருட்டிபி.சிவகொழுந்து

47.கடலூர்ஞானபண்டிதன்

48.கீழ்வேளூர் (தனி) – ஆர்.பிரபாகரன்

49.பேராவூரணிஎம்.முத்து சிவக்குமார்

50.புதுக்கோட்டைஎம்.சுப்பிரமணியன்

51.சோழவந்தான் (தனி) – எம்.ஜெயலட்சுமி

52.மதுரை மேற்குபி.பாலச்சந்தர்

53.அருப்புக்கோட்டைஆர்.ரமேஷ்

54.பரமக்குடி (தனி) – கு.சந்திர பிரகாஷ்

55.தூத்துக்குடியு.சந்திரன்

56.ஒட்டபிடாரம் (தனி) – எஸ்.ஆறுமுக நயினார்

57.ஆலங்குளம்எஸ்.ராஜேந்திரநாதன்

58.ராதாபுரம்கே.ஜெயபால்

59.குளச்சல்எம்.சிவக்குமார்

60.விளவன்கோடுஎல்.ஐடன் சோனி

Translate »
error: Content is protected !!