எல்லையில் ஊடுருவ முயன்ற சீன வீரர்களுக்கு பதிலடி கொடுத்த இந்தியா வீரர்கள்: 20 சீன வீரர்கள் காயம்

சிக்கிம்,

சிக்கம் எல்லையில் ஊடுருவ முயன்ற சீன ராணுவத்தினரை இந்திய வீரர்கள் தாக்கி விரட்டியடித்தனர். இதில் 20 சீன வீரர்கள் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கிழக்கு லடாக் எல்லை பகுதியில் கடந்த ஆண்டு மே மாதம் சீனா அத்துமீறலில் ஈடுபட்டதைத் தொடா்ந்து, இரு நாடுகளிடையே அப்போது முதல் மோதல் போக்கு நடைபெற்று வருகிறது. இரு எல்லையிலும் ராணுவத்தினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு தொடர்ந்து நீடித்து வருகிறது.

இதற்கிடையே, எல்லை பிரச்னை தொடர்பான பதட்டத்தை தணிக்க இரு தரப்பு அதிகாரிகள், தொடர்ந்து பேச்சு நடத்தி வருகின்றனர். இரண்டரை மாதங்கள் இடைவெளிக்குப் பிறகு நேற்று 9–ம் சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்நிலையில், இன்று சிக்கிம் எல்லையில் நகுலா பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சீன ராணுவத்தினர் ஊடுருவ முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சீன வீரர்களின் முயற்சியை நமது இந்திய ராணுவத்தினர் முறியடித்தனர்.

ஊடுருவ முயன்ற சீன வீரர்களை, இந்திய வீரர்கள் தாக்கி விரட்டியடித்தனர். இதில், 20 சீன வீரர்கள் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியர்கள் தரப்பிலும் சிலருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது அங்கு சூழல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

 

Translate »
error: Content is protected !!