ஏப்.6 ம் தேதி தேர்தல்… வேட்பாளர்கள் சூறாவளி பிரச்சாரம்.. ஏப்.4 ம் தேதி இரவு 7:00 மணியுடன் பிரசாரம் ஓய்வு

ஏப்.6 ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் வேட்பாளர்கள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏப்.4 ம் தேதி இரவு 7:00 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது.

சுவர் விளம்பரம், பிளக்ஸ் பேனர் வைப்பதில் பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. அதனால் அரசியல் கட்சிகள் துண்டு பிரசுரங்கள் அச்சிட்டு வீடு வீடாக வினியோகித்து ஓட்டு சேகரிக்கின்றனர்.

மறுபுறம் கட்சிகள் அனைத்தும் இணையதள விளம்பரத்தில் கால்பதித்துள்ளன. வாட்ஸ் ஆப், பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் போட்டி போட்டு விளம்பரம்செய்கின்றனர். சின்னம் மட்டும் இடம் பெற்றுள்ள விளம்பரங்கள் கட்சி கணக்கிலும், வேட்பாளர் பெயர், புகைப்படத்துடன் கூடிய விளம்பரங்கள் வேட்பாளர் கணக்கிலும் சேர்க்கப்படுகிறது.

சமூக வலைத்தளங்களை கண்காணித்து அதில் வரும் விளம்பரங்களை பட்டியலிட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன் படி, ‘மானிட்டரிங் கமிட்டிமூலம் தினமும் சமூக வலைத்தளங்களில் திண்டுக்கல் மாவட்ட வேட்பாளர்கள் தொடர்பான விளம்பரங்களை தேர்தல் பார்வையாளர்கள் தீவிரமாக கண்காணிக்கின்றனர். வேட்பாளர் செலவு கணக்கில் சமூக வலைத்தள விளம்பரங்களும் கணக்கிடப்பட்டு சேர்க்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Translate »
error: Content is protected !!