ஐஸ்லாந்து நாட்டில் இருந்து கொரோனா சிகிச்சைக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் விமானம் மூலம் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்தியில் கொரோனா வைரஸ்சின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் நோய்யாளிகளின் சிகிச்சைக்கு ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களுக்கான தேவையும் அதிகரித்துவருகிறது.
இதனால் இந்தியாவிற்கு பல்வேறு நாடுகளில் இருந்து மருத்துவ உபரணங்கள், தடுப்பூசிகள், ரெம்டெசிவிர் மருந்துகள் உள்ளிட்ட கொரோனா சிகிச்சைக்குத் தேவையான உபகரணங்கள் சரக்கு விமானங்கள் மூலமாக அனுப்பி வைக்கப்படுகின்றன.
இந்நிலையில் ஐஸ்லாந்து நாட்டில் கொரோனா சிகிச்சைக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் விமானம் மூலம் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.அதில் 12 ஆயிரம் ஃபேவிபிர் மாத்திரைகள், 15 வெண்டிலேட்டர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் என ஐஸ்லாந்து அரசு சார்பில் இந்தியாவிற்கு விமானம் மூலம் அனுப்பப்பட்டன.