ஒ.பன்னீர்ச்செல்வம் வீட்டை முற்றுகையிட வந்த சீர்மரபினர் நலச்சங்கத்தினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தம்

பெரியகுளத்தில் உள்ள தமிழக துணை முதல்வர் வீட்டை முற்றுகையிட வந்த ஐயாகண்ணு தலைமையிலான சீர்மரபினர் நலச்சங்கத்தினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தம்

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இன்று 68 சமுதாய உட்பிரிவுகளை கொண்ட சீர்மரபினர் நலசங்கம் சார்பில்   மத்திய அரசின் சார்பில் 1979ஆம் ஆண்டிற்கு முன்பு வழங்கிய DNT என சாதி சான்றிதல் வழங்கோரி பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்த நிலையில்,

தமிழக அரசு தற்பொழுதுவரை DNC  என்ற சாதி சான்றிதல் வழங்கி வருவதல் தமிழக அரசு இரட்டை சான்றிதழ் முறையை நிறுத்திவிட்டு ஒற்றைச் சான்றிதல் முறையை நடைமுறை படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு தலைமையில் சீர்மரபினர் நலச்சங்கதினர் பெரியகுளத்தில் உள்ள  தமிழக  துணை முதல்வர் .பன்னீர்ச்செல்வம் அவர்களின் வீட்டை முற்றுகையிட முயன்ற போது பெரியகுளம் தென்கரை  காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதனை தொடந்து அய்யாகண்ணு அவர்கள் அவரது கோரிக்கையை  தமிழக துணை முதலவர் .பன்னீர்செலவத்திடம் தொலை பேசியில் பேசிய போது அவர்களது கோரிக்கைகளுக்கு முறையான நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை தொடர்ந்து அய்யாகண்ணு தலைமையில் முற்றுகையிட வந்த சீர்மரபினர் நலச்சங்கத்தினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். தமிழக துணை முதல்வர் வீட்டை அய்யாகண்ணு முற்றுகையிட வருவதாக வந்த தகவலை தொடர்ந்து துணை முதல்வரின் வீடுகளுக்கு செல்லும் அனைத்து சாலைகளும் பேரிகார்டுகள் போட்டு அடைத்து  காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.  

Translate »
error: Content is protected !!