கட்டுக்கட்டாக 1000 ரூபாய் நோட்டுகள்… தீவிர விசாரணையில் போலீசார்..!

கடந்த, 2016 நவம்பரில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என அறிவித்தார். அவற்றுக்குப் பதிலாகபிங்க்நிறத்திலான 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், மத்திய அரசு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறையைப் பிரபலப்படுத்தி வந்தது. இதன் மூலம், கறுப்புப் பணம் முற்றிலும் ஒழிக்கப்படும் எனக் கூறப்பட்டது.

ஆனாலும், கணக்கில் வராத பழைய  500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் ஆங்காங்கே இன்றும் பிடிபட்டு வருகின்றன. அந்தவகையில், சிவகங்கை மாவட்டம், காளையர் கோவில் அருகில் உள்ள மேலவலயம்பட்டியில் உள்ள அருள் சின்னப்பராஜ் (41) என்பவரது வீட்டில் கட்டுக்கட்டாக பழைய 1,000 ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அருள் சின்னப்பராஜ் பெங்களூரில் பிசியோதெரபிஸ்டாக பணியாற்றி வருகிறார். தகவலின் பேரில், நேற்று (12.04.2021) மாலை, அவரது வீட்டில் சோதனை மேற்கொண்ட போலீசார், ரூபாய் 4.5 கோடி மதிப்புள்ள பழைய 1,000 ரூபாய் நோட்டுகளைக் கைப்பற்றியுள்ளனர். இதுகுறித்துப் பேசிய எஸ்.பி.ராஜராஜன், “காளையர் கோவில் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதுஎன்றார்.

Translate »
error: Content is protected !!