கரையை கடக்க தொடங்கிய யாஸ் புயல்.. ஒடிசா கடலோரப் பகுதியில் 155 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசுகிறது.ஒடிசாவில்
வங்கக்கடலில் மையம் கொண்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது அதி தீவிர புயலாக மாறியது. இதற்கு ‘யாஸ்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதிதீவிரப் புயல் இன்று காலை வடக்கு ஒடிசா, மேற்கு வங்கம் இடையே கரையைக் கடக்கத் தொடங்கியுள்ளது.
இதனால் ஒடிசா கடலோரப் பகுதிகளில் மணிக்கு 155 கி.மீ. வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசுகிறது. பலத்த காற்று வீசுவதால் கடல் மிகுந்த கொந்தளிப்புடன் காணப்படுகிறது. சூறைக்காற்றால் வீடுகள், கட்டடங்களின் கூரைகள் காற்றில் பறந்தன. கடலோரப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.