கர்நாடகாவில் பல மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 9 மாதங்களுக்கு பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன.

கர்நாடகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் கொரோனா பரவல் தொடங்கியது. இதையடுத்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. மேலும் இந்த கல்வி ஆண்டில் ஆன்லைன் மூலம் மாணவமாணவிகளுக்கு பாடம் கற்றுக்கொடுக்கப்பட்டு வருகிறது

இந்த நிலையில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து கர்நாடகத்தில் பள்ளி, பி.யூ.சி. கல்லூரிகளை திறக்க கர்நாடக அரசு முடிவு செய்தது. அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) முதல் கர்நாடகத்தில் 10-ம் வகுப்பு, பி.யூ.சி. 2-ம் ஆண்டுகள் வகுப்புகள் திறக்கப்பட்டுள்ளன.

இதையொட்டி பள்ளி, பி.யூ.சி. கல்லூரிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது பள்ளிகளில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து மாணவமாணவிகள் அமரும் வகையில் இருக்கைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதுஅதுபோல் கிருமிநாசினி தெளித்தும் பள்ளி வகுப்பறைகள் தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும் முகக்கவசம் அணிந்து மாணவர்கள் பள்ளி, கல்லூரிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

Translate »
error: Content is protected !!