கர்நாடகாவில் மே 12க்குப் பிறகு முழு ஊரடங்கு?

கர்நாடகாவில் கொரோனா பரவல் மேலும் அதிகரித்தால் வருகிற மே 12ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் கொரோனா தினசரி பாதிப்பு 40ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஏற்கனவே மாநிலம் முழுவதும் சில கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து முதல்வர் எடியூரப்பா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடியூரப்பா, கொரோனா பரவல் மேலும் அதிகரித்து வந்தால், மே 12 ஆம் தேதிக்குப் பிறகு, முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார். இதற்கிடையே உத்திரப் பிரதேசத்தில் மே 10ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!