முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுய்க் அவர்களின் 180வது பிறந்த நாள் விழா தமிழக துணை முதலமைச்சர் மற்றும் தேனி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை.
தேனி, மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை,திண்டுக்கல் மாவட்டம் உட்பட ஐந்து மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது முல்லைப்பெரியாறு அணை. முல்லைப் பெரியாறு அணையை கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் ஜான் பென்னி குய்க் பிறந்த நாளான ஜனவரி 15ஆம் தேதி பென்னிகுய்க் பொங்கலாக தென் தமிழக மக்களால் கொண்டாடி வருகின்றனர்.
பென்னிகுய்க் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என விவசாய சங்கங்கள், பொதுமக்கள், பெரியாறு அணையை மீட்புக்குழுவினர் நீண்ட காலமாக அரசை வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு சட்டப் பேரவையில் கர்னல் ஜான் பென்னிகுக் பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.
இந்நிலையில் இன்று கர்னல் ஜான் பென்னி குய்க் அவர்களின் 180 வது பிறந்தநாள் விழா இரண்டாவது ஆண்டாக அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. கர்னல் ஜான் பென்னிகுய்க் அவர்களின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தேனி மாவட்டம் லோயர் கேம்பில் அமைந்துள்ள அவரது மணி மண்டபத்தில் தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாய்சரண் ,தேனி பாரளமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத், கம்பம் சட்ட மன்ற உறுப்பினர் ஜக்கையன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.