காசு கொடுத்தால் எங்கள் வீட்டு கழுதை கூட ஓட்டுப்போடாது… ஓபிஎஸ் “போடி தொகுதியில்” மலைகிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கூறி போராட்டம்

காசு கொடுத்து ஓட்டு வாங்க நினைத்தால் எங்கள் வீட்டு கழுதை கூட ஓட்டுப்போடாது என்ற வாசகத்தை எழுதி கோவேறி கழுதையின் முகத்தில் கட்டி துணை முதல்வர் போடி தொகுதி மலைகிராம மக்கள் சோத்துப்பாறை அணை பகுதியில் ரேஷன் கார்டுகளை சாலையில் போட்டு தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கூறி போராட்டம்.

தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அகமலை ஊராட்சியின் ஒரு பகுதியான ஊரடி,  ஊத்துக்காடு, குறவன் குழலி, கருங்கல் பாறை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மலை கிராமங்களுக்கு அடிப்படை வசதிகளான சாலை வசதியை இதுவரை எந்த அரசாங்கமும் செய்து தராததால் இன்று மலைகிராம மக்கள் ஒன்றாக திரண்டு வந்து பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணை பகுதியில் தங்களின் ரேஷன் கார்டுகளை சாலையில் போட்டு தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் தொடர்ந்து  தங்கள் தொகுதியில் வேட்பாளராக வெற்றி பெற்றவர்கள் சாலை வசதியை செய்து தருவதாக வாக்குறுதிகளை மட்டுமே கொடுத்த நிலையில் இன்று வரை சாலை வசதி இல்லாததால் அரசு வழங்கும் இலவச ரேஷன் அரிசியை கூட 500 ரூபாய் செலவு செய்து தங்கள் இல்லங்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலையில் உள்ளதாக கூறி தொடர்ந்து மலை கிராம மக்கள் சாலை வசதியின்றி பெரும் இன்னல்களை சந்தித்து வருவதாக கூறி வரும் சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அவர்கள் அங்கு விளைவிக்கும் விளை பொருட்களை சுமந்துவரும் கோவேரி கழுதையில் முகத்தில் காசு கொடுத்து ஓட்டு வாங்க நினைத்தால் எங்கள் வீட்டு கழுதை கூட ஓட்டுப்போடாது என்ற வாசகத்தை எழுதி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த போடி தொகுதியில் தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம் இரு சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார் குறிப்பிடத்தக்கது

Translate »
error: Content is protected !!