கான்பெராவில் நடைபெற்ற முதல் டி20 கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலியாவை 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி, 1-0 என்று இத்தொடரில் முன்னிலை பெற்றது.
இந்திய – ஆஸ்திரேலிய அணிகள் மோதிய முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி, கான்பெராவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி, இந்தியா தரப்பில் தொடக்க வீரர்களாக தவான், கேஎல். ராகுல் களமிறங்கினர். தவான் (1), கோலி (9), மணீஷ் பாண்டே (2), சாம்சன் (23) என விரைவில் பெவிலியன் திரும்பினாலும், கேஎல் ராகுல் அபாரமாக ஆடினார். அவர், அரைசதம் கடந்து 51 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஹர்திக் பாண்டியாவும் 16 ரன்களுக்கு வெளியேறினாலும், ஜடேஜா கைகொடுத்தார். 23 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் சேர்த்தது. ஆஸ்திரேலியா தரப்பில் ஹென்ரிக்ஸ் 3 விக்கெட்டும், ஸ்டார்க் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் 162 ரன்கள் தேவை என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 20 ரன்கள் மட்டுமே எடுத்து, 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஆஸ்திரேலிய வீரர்களில் கேப்டர் பிஞ்ச் அதிகபட்சமாக 35 ரன்கள் எடுத்தார்.
இந்திய தரப்பில் தமிழக வீரர் நடராஜன் 3 விக்கெட் கைப்பற்றினார். சஹல் 3, தீபக் சாகர் 1 விக்கெட் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.