குஜராத்தின் முன்னாள் முதல் மந்திரி மற்றும் பழம்பெரும் காங்கிரஸ் தலைவரான மாதவ்சிங் சோலங்கி இன்று காலமானார்.
ஆமதாபாத்,
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பழம்பெரும் தலைவர் மற்றும் குஜராத்தின் முன்னாள் முதல் மந்திரியாக இருந்தவர் மாதவ்சிங் சோலங்க, வயது முதிர்வினால் அவர் இன்று காலமானார், அவருக்கு வயது 93.
அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார். அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், சமூகத்திற்கு ஆற்றிய அளப்பரிய சேவைகளுக்காக மாதவ் சிங் சோலங்கி ஜி நினைவுகூரப்படுவார்.
அரசியலுக்கு அப்பாற்பட்டு, நூல்கள் வாசிப்பதில் சோலங்கி ஜி மகிழ்ச்சி அடைபவர். கலாசாரம் மீதும் ஆர்வம் கொண்டவர். அவரை சந்திக்கும்போதும், அவரிடம் பேசும்போதும் புத்தகங்களை பற்றி நாங்கள் விவாதித்து கொள்வோம்.
சமீபத்தில் வாசித்த புதிய புத்தகம் பற்றி அவர் என்னிடம் கூறுவார். எங்களுக்கு இடையேயான உரையாடல்களில் நான் எப்போதும் மகிழ்ச்சி அடைவேன் என கூறியுள்ளார். குஜராத்தின் முதல் மந்திரியாக 4 முறை பதவி வகித்த சோலங்கி, கடந்த 1991ம் ஆண்டு முதல் 1992ம் ஆண்டு வரை மத்திய அரசில் வெளிவிவகார துறை மந்திரியாகவும் இருந்துள்ளார்.