குஜராத் மாநிலத்தில் இன்று மாலை திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பீதியடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து இதுவரை தகவல் இல்லை.
குஜராத் மாநிலம் பரூச் நகர் பகுதியில், இன்று மாலை 4.00 மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவானதை, தேசிய நிலநடுக்கவியல் மையம் உறுதி செய்துள்ளது.
நில நடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. வீடுகளில் பொருட்கள் உருண்டோடியதால், மக்கள் பீதியடைந்து திறந்த வெளிக்கு வந்தனர். எனினும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருள் சேதங்கள், உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளதா என்ற விவரங்கள் எதுவும் தெரியவில்லை.