கூட்டணிக்கு 8ந் தேதி கடைசி நாள் – திமுக முடிவு?

கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டை விரைந்து இறுதி செய்ய உத்தரவு, திமுக தொகுதி பங்கீட்டு குழுவினருக்கு அக்கட்சி தலைவர் மு.. ஸ்டாலின் உத்தரவு? 8-ம் தேதிக்குள் அனைத்து கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்ய உத்தரவிட்டுள்ளதாக தகவல். 10-ம் தேதி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்ப்பு,

வேட்பாளர் பட்டியலை 10ந் தேதி வெளியிட வசதியாக கூட்டணி பேச்சுவார்த்தையை முடிக்க உத்தரவு,  திமுக கூட்டணியில் இதுவரை நான்கு கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது,  திமுக மமகவுக்கு 2 தொகுதிகள், விசிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது. காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் திமுக தொடர்ந்து பேச்சுவார்த்தை.

Translate »
error: Content is protected !!