புதுடெல்லி,
கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது இந்தியாவில் 1 லட்சத்து 60 ஆயிரத்து 57 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,039 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1 கோடியே 7 லட்சத்து 77 ஆயிரத்து 284 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 14,255 பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 4 லட்சத்து 62 ஆயிரத்து 631 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் 110 பேர் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 54 ஆயிரத்து 596 ஆக உள்ளது. நாடு முழுவதும் தொற்று பாதிப்புடன் 1 லட்சத்து 60 ஆயிரத்து 57 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட முன்கள பணியாளர்கள் எண்ணிக்கை 41 லட்சத்து 38 ஆயிரத்து 918 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 7 லட்சத்து 21 ஆயிரத்து 121 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 19 கோடியே 84 லட்சத்து 73 ஆயிரம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.