கேரளாவில் மேலும் 12,868 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கேரளாவில் மேலும் 12,868 பேருக்கு இன்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29,37,033 ஆக அதிகரித்துள்ளது.

மாநிலம் முழுவதும், கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கப்பட்ட 124 பேர் இன்று உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,359 ஆக அதிகரித்து வருகிறது.

கேரளாவில், ஒரே நாளில் 11,564 பேர் கொரோனா நோய்த்தொற்றில் இருந்து மீண்டுள்ளனர், மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 28,21,151 ஆக உள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது 1,02,058 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

 

Translate »
error: Content is protected !!