கேரள மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் பதவி விளக்கியுள்ளார்..
கே.டி.ஜலீலின் ஒன்றுவிட்ட சகோதரர் அதீப், விதிமுறைகளை மீறி, கேரள மாநில சிறுபான்மையினர் மேம்பாட்டு நிதி கழக பொதுமேலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக புகார் கூறப்பட்டது..
இந்த புகாரை விசாரித்த மாநில லோக் ஆயுக்த., கடந்த 9-ந் தேதி முதல்–மந்திரி பினராயி விஜயனிடம் அறிக்கை சமர்ப்பித்தது. அதில், கே.டி.ஜலீலுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு இருப்பதாகவும், அவர் மந்திரி பதவியில் தொடரக்கூடாது என்றும் கூறியிருந்தது.
இந்த உத்தரவுக்கு எதிராக கேரள ஐகோர்ட்டில் கே.டி.ஜலீல் நேற்று முன்தினம் மனுதாக்கல் செய்தார். இந்தநிலையில், கே.டி.ஜலீல் நேற்று தனது மந்திாி பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை முதல்–மந்திரி பினராயி விஜயனுக்கு அனுப்பி வைத்தார்.