திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு கேட்ட தொகுதி கிடைக்காததால் காங்கிரஸ் தலைவர் கே. எஸ் அழகிரி விரக்தி அடைந்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்க்களிடம் பேசிய அவர்:-
நாம் 15 வருடமாக திமுக கூட்டணியில் உள்ளோம். 100 தொகுதிகளில் திமுகவின் வெற்றிக்கு காங்கிரஸ் உறுதுணையாக இருக்கிறது. எனவே கவுரவமான எண்ணிக்கையில் தொகுதிகளை அவர்களே தருவார்கள் என எதிர்பார்த்தோம்.
தொகுதிகளின் எண்ணிக்கை குறைவு என்பதைவிட நம்மை நடத்திய விதம்” எனக் கூறுகையில் கண் கலங்கிய கே.எஸ்.அழகிரி, கண் கண்ணாடியை கழற்றி கண்ணீரைத் துடைத்துக்கொண்டு ”இனி நான் பேச்சுவார்த்தைக்கு வரமாட்டேன்.
நீங்களே சென்று பேசி தொகுதிப் பங்கீடு செய்து வாருங்கள், நான் இறுதியாக கையெழுத்திட வருகிறேன்” என நிர்வாகிகளிடம் பேசியதாக தகவல்கள் வெளியகியுள்ளன.