கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு கோரி வழக்கறிஞர்கள் கவுரவ் குமார் பன்சல் மற்றும் ரீபோக் கன்சல் ஆகியோர் கடந்த மே மாதம் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான பெஞ்ச் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வழிகாட்டுதல்களை உருவாக்க நீதிபதிகள் அரசுக்கு உத்தரவிட்டனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகை குறித்து தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் பேரிடர் மேலாண்மை ஆணையம் முடிவு செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதே நேரத்தில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு இறப்பு சான்றிதழ் முறையை எளிமைப்படுத்த நீதிபதிகள் உத்தரவிட்டனர்.