கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால் இதுவரை உயிரிழப்பு ஏதும் இல்லை…. சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தகவல்

டெல்லி,

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால் யாரும் உயிரிழக்கவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி இந்தியாவில் கண்டறியப்பட்டு, கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகளுக்கு அவசரகால அனுமதி கொடுக்கப்பட்டுள்ள நிலையில், முதல்கட்டமாக முன்களப்பணியாளர்கள் தடுப்பூசியை போட்டு கொண்டிருக்கின்றார்கள்.

நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் உள்ள முன்கள பணியாளர்கள் இந்த தடுப்பூசியை எடுத்து கொண்டுள்ள நிலையில், கொரோனா தடுப்பூசி குறித்து சில வதந்திகளும் பரப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இது குறித்து பேசியுள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், இதுவரை கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் யாரும் உயிரிழக்கவில்லை எனவும், அது தொடர்பாக ஆராய்ச்சிகள் நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார். மேலும், கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களில் மிகவும் குறைவான நபர்களுக்கு மட்டுமே பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

Translate »
error: Content is protected !!