திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திமுக எம்எல்ஏ–க்கள் கூட்டத்தில் ஆலோசித்து பதவிப் பிரமாணத்திற்கான தேதி பற்றி முடிவு அறிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
கொரோனா காரணமாக ஆளுநர் மாளிகையிலேயே எளிமையாக பதவியேற்பு விழா நடைபெறும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். கொரோனா பரவலை கருத்தில்கொண்டு ஆடம்பரம் இல்லாமல் பதவியேற்பு விழா நடைபெறும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.