கொரோனா 3 வது அலை.. இந்திய மருத்துவத் துறையின் உள்கட்டமைப்பு சமாளிக்க தயார் – நிர்மலா சீதாராமன்

இந்திய உலகளாவிய கூட்டமைப்பு கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காணொலி வாயிலாக பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியது,  கொரோனா 3 வது அலையை யாரும் விரும்பவில்லை. ஒருவேளை 3 வது அலை ஏற்பட்டால், இந்திய மருத்துவத் துறையின் உள்கட்டமைப்பு அதைச் சமாளிக்க சிறப்பாக தயாராக உள்ளது. இது குறித்து, அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளது. மெட்ரோ நகரங்களில் மட்டுமல்ல, 2 மற்றும் 3 வது வகை நகரங்களிலும் மருத்துவ உள்கட்டமைப்பை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளோம். தினமும் 45 லட்சம் முதல் 50 லட்சம் தடுப்பூசி வரை மக்களுக்கு போடப்படுகிறது. இதுவரை 33 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது“. என்றார்..

Translate »
error: Content is protected !!