கொல்கத்தாவில் அசாதுதீன் ஓவைசி பிரச்சாரம் செய்ய காவல்துறை அனுமதி மறுப்பு – ஏ.ஐ.எம்.ஐ.அம். கட்சி கடும் கண்டனம்

கொல்கத்தாவில் அசாதுதீன் ஓவைசி பிரச்சாரம் செய்ய காவல்துறை அனுமதி அளிக்க மறுத்ததற்கு ..எம்..அம். கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கொல்கத்தா,

மேற்கு வங்கத்தில் இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் 3-வது முறையாக ஆட்சியைக் பிடிக்க திரிணமூல் காங்கிரஸ் முயன்று வருகிறது. அதே நேரம் முதல் முறையாக ஆட்சியைக் கைப்பற்ற பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

மேலும் காங்கிரஸ்இடதுசாரிகள் கூட்டணி தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகிறது. இதற்கிடையில் பிகார் சட்டப்பேரவையில் நடந்த தேர்தலில் 5 இடங்களில் வெற்றி பெற்ற ..எம்..எம். கட்சி மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலிலும் போட்டியிட முனைப்பு காட்டி வருகிறது.

இது குறித்து திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி பேசும்போது, ..எம்..எம். கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி, பணத்தை பெற்றுக் கொண்டு வாக்குகளைப் பிரிக்கப் பார்ப்பதாக குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் அசாதுதீன் ஒவைசி, பணத்தால் தன்னை வாங்குவதற்கு யாரும் இல்லை என்று கூறியிருந்தார்.

இந்தநிலையில் அசாதுதீன் ஒவைசி இன்று மேற்குவங்க மாநிலத்தில் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டு இருந்தார். இதற்கு அனுமதி கோரி கொல்கத்தா காவல்துறையினரிடம் மனு அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி காவல்துறை அனுமதி அளிக்க மறுத்துள்ளது

இதற்கு ..எம்..எம். கட்சியின் மேற்குவங்க மாநில தலைவர் சமுரூல் ஹசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்ஒவைசியை பார்த்து மம்தா பானர்ஜி பயப்படுவதால் தான், பிரச்சாரம் செய்ய காவல்துறை அனுமதி மறுக்கிறது. இதன் மூலம் சட்டப்பேரவைத் தேர்தலில் மம்தா பானர்ஜி தோல்வியடைவது நிச்சயம்என்று கூறியுள்ளார்.

 

Translate »
error: Content is protected !!