கொல்கத்தா கூச் பெஹார் வாக்குச்சாவடியில் திடீர் துப்பாக்கி சூடு.. ஒருவர் உயிரிழப்பு

கொல்கத்தா,

மேற்கு வங்கத்தில் இன்று நான்காம்கட்ட தேர்தல் நடைபெறும் நிலையில், கூச் பெஹார் பகுதியிலுள்ள வாக்குச்சாவடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை மூன்று கட்டங்களாக 91 தொகுதிகளில் சட்டசபை வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. இன்று நான்காம் கட்டமாக 44 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இன்று காலை முதலே பொதுமக்கள் ஆர்வத்துடன் நின்று வாக்களித்து வருகின்றனர். அங்கு இன்று காலை 9.30 மணி வரை 15.85% வாக்குகள் பதிவாகியுள்ளது. இந்நிலையில், வங்கத்திலுள்ள கூச் பெஹார் பகுதியில் அமைந்திருக்கும் வாக்குச்சாவடி எண் 172இல், வாக்களிக்க வந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இதில் அவர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அங்கு வெடிகுண்டுகளும் வீசப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர கூச் பெஹார் பகுதிக்குக் கூடுதல் பாதுகாப்புப் படையினர் அனுப்பப்பட்டுள்ளனர்.

மேலும், பாஜக வேட்பாளரும் எம்பியுமான லாக்கெட் சாட்டர்ஜியின் காரின் மீது ஹூக்லி மாவட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அங்கிருந்த ஊடக துறையினரின் கார்களும் தாக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Translate »
error: Content is protected !!