கோரிக்கைகளை ஏற்க மறுத்தால் பெட்ரோல் நிலையங்களை மூடுவோம் – விவசாயிகள் தீடிர் மிரட்டல்

4-ந்தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் தங்களது கோரிக்கைகளை ஏற்க மறுத்தால் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மற்றும் பெரிய வணிக நிறுவனங்களை மூடப்போவதாக விவசாயிகள் திடீர் மிரட்டல் விடுத்துள்ளனர்.

மத்திய அரசு   கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இன்று 38-வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில்   மத்திய அரசு   நடத்திய 5 கட்ட பேச்சுவார்த்தைகளில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. சமீபத்தில் நடத்திய 6-வது கட்ட பேச்சுவார்த்தையில் விவசாயிகளின் 2 கோரிக்கைகளுக்கு முடிவு எட்டப்பட்டது.

ஆனால் விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகளான 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுதல் மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் ஆகிய 2 கோர்க்கைகளுக்கு இன்னும் தீர்வு எட்டப்படவில்லை. இதுதொடர்பாக வருகிற 4-ந்தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.

இந்த பேச்சுவார்த்தையில் தங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடுமையான போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் விவசாயிகள் எச்சரித்துள்ளனர். இந்தநிலையில் 4-ந்தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் தங்களது கோரிக்கைகளை ஏற்க மறுத்தால் அரியானாவில் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மற்றும் பெரிய வணிக நிறுவனங்களை மூடப்போவதாக விவசாயிகள் திடீர் மிரட்டல் விடுத்துள்ளனர்.

தங்கள் போராட்டத்தை ஒடுக்க முடியாது என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் குண்ட்லிமனேசர் இடையே டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்றும் விவசாயிகள் கூறியுள்ளனர். இந்த டிராக்டர் பேரணி மிக பிரமாண்ட அளவில் நடத்தப்படும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர் இதுதொடர்பாக வேளாண் சங்க பிரதிநிதிகள் கூறியது, மத்திய அரசுவிவசாயிகளுடன் இதுவரை நடத்திய பேச்சுவார்த்தைகளில் விவசாயிகள் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளில் 5 சதவீதம் மட்டுமே விவாதிக்கப்பட்டு இருக்கிறது.

இது எங்களுக்கு அதிருப்தி அளித்துள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து டெல்லி ஷாகீன்பாக்கில் நடந்த போராட்டத்தை போன்று எங்களது போராட்டத்தையும்  மத்திய அரசு  கருத வேண்டாம். எங்களின் போராட்டத்தை ஒடுக்கிவிட முடியாது. விவசாயிகள் போராட்டம்   தொடர்பாக மத்திய வேளாண்துறை மந்திரி நரேந்திரசிங் தோமர் கூறியது. விவசாயிகளுடன் நடத்தப்படும் அடுத்தகட்ட பேச்சு வார்த்தையில் சுமூகமான தீர்வு கிடைக்கும் என்று அரசு நம்புகிறது. 4 கோரிக்கை களில் 2 கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 50 சதவீத பிரச்சினைக்கு தீர்வு கண்டுள்ளோம். மீதம் உள்ள 2 கோரிக்கைகளுக்கு தீர்வு காண வருகிற 4-ந்தேதி பிற்பகல் 2 மணிக்கு பேச்சு வார்த்தை நடைபெறும்.

 

Translate »
error: Content is protected !!