கொரோனாவைரஸ் பாதிப்புக்கு தடுப்பூசி எடுத்துக் கொண்டவர் திடீரென உயிரிழந்தார் என கூறும் தகவல் வைரலாகி வருகிறது.
கொரோனாவைரஸ் பாதிப்பை விட அதைபற்றி சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் அதிக ஆபத்து நிறைந்தவையாக உள்ளன. உலகையே அடியோடு மாற்றியிருக்கும் நிலையில், கொரோனா தொற்று பற்றிய போலி தகவல்கள் பாரபட்சமின்றி வைரலாகி வருகின்றன.
அந்த வரிசையில், கொரோனாவைரஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்ட செவலியர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துவிட்டார் என கூறும் தகவல் தற்சமயம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் அமெரிக்காவில் நடைபெற்றதாக வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
அமெரிக்காவில் செவிலியராக இருக்கும் டிபானி டோவர் பி–பைசர் பயோ என்டெக் தடுப்பூசி போட்டுக் கொண்டதும் மயங்கி விழுந்தார். தற்சமயம் இவர் உயிரிழந்துவிட்டார் என வைரல் பதிவுகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், அவர் மரணிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் மரணித்ததாக கூறப்படும் செவலியர் மீண்டும் பணியாற்றியிருக்கிறார் என அவர் பணியாற்றும் மருத்துவமனையின் விளம்பர பரிவு அதிகாரி தெரிவித்து இருக்கிறார். அந்த வகையில் கொரோனாவைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட செவிலியர் உயிரிழந்தார் என கூறும் தகவல்களில் துளியும் உண்மையில்லை என்பது உறுதியாகிவிட்டது. போலி செய்திகளை பரப்புவதால் பெரும் பாதிப்புகளை ஏற்படுகின்றன