சசிகலா வருகை: காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்

அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்த கூடாது என்றும், தமிழகத்திற்குள் 5 வாகனங்கள் மட்டுமே பின்தொடர்ந்து வர அனுமதி என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

அதிமுக கட்சியில் அடிப்படை உறுப்பினராக இல்லாத சசிகலா, அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது என காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து தற்போது கிருஷ்ணகிரி உட்கோட்டம் காவல்துறை கண்காணிப்பாளர் சசிகலா உட்பட யாரும் அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தற்போது உள்ள கோவிட் -19 மற்றும் சட்டம் ஒழுங்கு நிலையை கருத்தில் கொண்டு காவல் சட்டம் அமலில் உள்ளதால் கீழ் கண்டுள்ள செயல்முறைகளைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருமதி சசிகலா அவர்களின் வாகனத்தின் பின்பு 5 வாகனங்கள் மட்டுமே பின்தொடர்ந்து வரவேண்டும். அதிமுக கட்சியினர் இதர வாகனங்கள் பின் தொடர்ந்து வர அனுமதி இல்லை. சசிகலா உள்பட யாரும் அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது. அப்படி பயன்படுத்துவது விதி மீறலாகும்

 ஒவ்வொரு வரவேற்பு இடத்திலும் அங்கு உள்ள இடத்தில் உள்ள 10 சதவீத அளவு சீருடை அணிந்த தொண்டர்கள் மட்டுமே நிறுத்திக்கொள்ளவேண்டும். பட்டாசு வெடிப்பதற்கும், பேண்ட் வாத்தியங்கள் வைப்பதற்கும் அனுமதி இல்லைஇவ்வாறு அந்த விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

பெங்களூருவில் இருந்து சென்னையை நோக்கி அதிமுக கொடியுடன் சசிகலா பயணம் மேற்கொண்டு வருகிறார். அவருடன் 100க்கும் மேல் கார்கள் பின்தொடர்ந்து வருகின்றன.

Translate »
error: Content is protected !!