திருச்சியைச் சேர்ந்த சமூக ஆர்வலரான 84 வயதான ஸ்டான் சுவாமி, எல்கர் பரிஷத் வழக்கு தொடர்பாக 2020 ல் மும்பையில் உள்ள தலோஜா சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது.
தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்.எச்.ஆர்.சி) அவருக்கு தகுந்த மருத்துவ சிகிச்சை பெற உத்தரவிட்டதையடுத்து, பழங்குடியினரின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் ஸ்டான் சுவாமி சமீபத்தில் மும்பையில் உள்ள ஹோலி ஃபேமிலி என்ற மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதால், அவர் இன்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இவரது மறைவுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர்,
தந்தை ஸ்டான் சுவாமி காலமானதற்கு மனமார்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். அவர் நீதி மற்றும் மனிதாபிமானத்திற்கு தகுதியானவர் என பதிவிட்டார்.
Heartfelt condolences on the passing of Father Stan Swamy.
He deserved justice and humaneness.
— Rahul Gandhi (@RahulGandhi) July 5, 2021