சிங்கப்பூரில் பரவி வரும் புதிய வகை கோரோனோ வைரஸ்

பிரிட்டனில் உருமாறிய புதிய வகை கொரோனா பரவி வருகிறது, இதனால் மரணம் ஏற்படும் அபாயம் இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினாலும் முந்தைய கொரோனா வகை மாதிரியை விட இது 70 சதவீதம் அதிகம் பரவக்கூடியது  என்று கூறுகின்றனர். இதனால் பல்வேறு நாடுகள் பிரிட்டனுக்கு விமான சேவையை ரத்து செய்துள்ளது.

இந்த நிலையில் பிரிட்டனில் இருந்து சிங்கப்பூருக்கும் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் B-117 பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனிலிருந்து சிங்கப்பூர் திரும்பிய 17 வயது மாணவிக்கு உருமாறிய புதிய வகை கொரோனா இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து மாணவியுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் நடத்தப்பட்ட சோதனையில் உருமாறிய புதிய வகை கொரோனா B-117 இல்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து சிங்கப்பூர் திரும்பியவர்களில் மேலும் 11 பேருக்கு உருமாறிய புதிய வகை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!