மும்பை,
எனது சில கோரிக்கைகளுக்கு மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளதால், சனிக்கிழமை முதல் தொடங்க திட்டமிட்ட காலவரையற்ற உண்ணாவிரதத்தை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளேன் என்று அன்னா ஹாசரே தெரிவித்துள்ளார்.
அன்னா ஹசாரே மகாராஷ்டிராவின் அகமதுநகரில் உள்ள ரலேகன் சித்தியில் விவசாயிகள் தொடர்பான கோரிக்கைகளுக்காக ஜனவரி 30 ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்திருந்தார். ஜனவரி 30-ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், தனது ஆதரவாளர்கள் அந்தந்த இடங்களில் எதிர்ப்பு தெரிவிக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் விவசாயிகள் தொடர்பான தனது கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றத் தவறினால், அவர் உண்ணாவிரதத்தில் ஈடுபட போவதாகவும், இது எனது கடைசி போராட்டமாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அன்னா ஹசாரே தற்போது எனது சில கோரிக்கைகளுக்கு மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளதுடன், விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்த ஒரு குழுவை அமைப்பதாகவும் அறிவித்துள்ளது. சனிக்கிழமை முதல் எனது முன்மொழியப்பட்ட காலவரையற்ற விரதத்தை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.