சுற்றுலாத்துறை சார்பாக நடைபெற்ற பென்னிகுவிக் பொங்கல் விழாவிற்கு மாட்டு வண்டியில் வந்த ஓபிஎஸ்.
முல்லைப் பெரியாறு அணை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக்ன் பிறந்தநாள் தேனி மாவட்டத்தில் கோலாகலமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம். இதற்கிடையே பென்னிகுவிக்கின் பிறந்த நாளை அரசு விழாவாக தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில் பென்னி குக்கின் 180-வது பிறந்த நாளான இன்று தேனி மாவட்டம் பாலார்பட்டி கிராமத்தில் பொங்கல் விழா படு விமர்சையாக நடைபெற்றது. சுற்றுலாத்துறை சார்பாக நடைபெற்ற இந்த பொங்கல் விழாவில் துணை முதல்வர் ஓபிஎஸ் கலந்து கொண்டார்.
முன்னதாக பலார்பட்டி கிராமத்திலிருந்து பென்னிகுவிக் படத்திற்கு மாலை அணிவித்து விழா நடைபெறும் மேடை வரை கிராமமக்கள் பொங்கல் பானைகளை தலையில் ஏந்தியவாறு ஊர்வலமாக சென்று பென்னிகுவிக் கலையரங்கம் முன்பு பொங்கல் வைத்து பென்னிகுவிக்கிற்கு நன்றி செலுத்தினர்.
விழாவில் பங்கேற்ற துணை முதல்வர் தலையில் பச்சை நிற உருமா கட்டியவாறு அங்கு இருந்த மாட்டு வண்டியில் விழா மேடைக்கு பயணித்தார், அவருடன் தேனி பாராளுமன்ற உறுப்பினர் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன் உள்ளிட்டோரும் மாட்டு வண்டியில் பயணம் செய்தனர். பின்னர் பொங்கல் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார் ஓபிஎஸ் பொங்கல் வைத்த பெண்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார்.