சென்னையின் பல பகுதிகளில் கனமழை! கருணாநிதி வீட்டில் புகுந்த மழைநீர்…

நிவர் புயலின் காரணமாக, சென்னை நகரில் பலத்த மழை பெய்து வருகிறது. பல இடங்களில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வீட்டிற்குள் மழை நீர் புகுந்தது.

வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள நிவர் புயல், படிப்படியாக வலுவடைந்துள்ளது. இது, காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் அருகே நாளை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புயலின் தாக்கத்தினால், தமிழகத்தின் கடலூர், விழுப்புரம், தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் சில மாவட்டங்களில் அதி கனமழைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை நகரிலும் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. கோபாலபுரத்தில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இல்லத்திற்குள் மழை நீர் புகுந்தது.

சென்னை நகரில் மழையால் கடும் வாகன நெரிசலும் ஏற்பட்டது. இதேபோல் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை நீடிக்கிறது.
தமிழ்நாடு மின்‌ உற்பத்தி மற்றும்‌ பகிர்மான கழகம்‌, நிவர்‌ புயல்‌ கட்டுப்பாட்டு உதவி மையம்‌, மீட்பு நடவடிக்கைகாக இன்று முதல்‌ அமைக்கப்பட்டுள்ளது.

புயல்‌ கட்டுப்பாட்டு உதவி மையம்‌, மீட்பு நடவடிக்கைகாக மண்டல வாரியான உதவி எண்களை மின்சார வாரியம் அறிவித்துள்ளது. பொதுமக்கள்‌ 24 மணி நேரமும்‌ கீழ்கண்ட தொலைபேசி மற்றும்‌ அலைபேசி எண்கள்‌ தொடர்பு கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!