சென்னையில் நாளை மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை

சென்னையில் நாளை மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே இருக்கும் நிலையில், கூட்டணி அமைப்பது குறித்தும், வெற்றி பெறுவதற்கான வியூகங்கள் தொடர்பாகவும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

 .தி.மு.தி.மு..வுக்கு மாற்றாக 3-வது அணியை அமைப்போம் என்கிற முனைப்புடன் களம் இறங்கியுள்ள மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பிரசாரத்தை தொடங்கி ஊர் ஊராக சுற்றுப்பயணம் செய்து வருகிறார். மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் முதல்கட்ட பிரசாரத்தை கடந்த வாரம் முடித்த கமல்ஹாசன் 2-ம் கட்ட பிரசாரத்தில் தற்போது தீவிரமாக உள்ளார்.

காஞ்சிபுரம், விழுப்புரம் மண்டலங்களிலும், புதுவையிலும் பிரசாரத்தை முடிக்கும் கமல்ஹாசன் இன்று இரவு சென்னை திரும்புகிறார். இதனைத் தொடர்ந்து சென்னையில் நாளை (23-ந்தேதி) மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்துகிறார். தி.நகரில் உள்ள ஜி.ஆர்.டி. ஓட்டலில் வழக்கறிஞர் அணி நிர்வாகிகளை சந்திக்கும் கமல், கட்சி பணிகள் குறித்து விவாதிக்க உள்ளார்.

பின்னர் மாலை 5 மணிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் பெண்கள் அணியினருடனும் கமல் கலந்துரையாடுகிறார். இந்த ஆலோசனையின்போது சட்டமன்ற தேர்தலில் பெண்களின் பங்களிப்பு தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.

இதன்பின்னர் திருச்சியில் இருந்து 3-ம் கட்ட பிரசாரத்தை கமல் தொடங்குகிறார். இதற்கான தேதி இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ளது. திருச்சி பிரசாரத்தை முடித்து விட்டு சேலம், கோவையிலும் கமல்ஹாசன் பிரசாரம் செய்ய உள்ளார். இதன்பின்னர் 4-ம் கட்ட பிரசாரத்தை கமல்ஹாசன், ஜனவரி மாதம் தொடங்குகிறார். சென்னையில் அனைத்து பகுதிகளுக்கும் செல்லும் வகையில் கமலின் பிரசார திட்டம் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

 

Translate »
error: Content is protected !!