அமெரிக்காவில்,நோவாவேக்ஸ் நிறுவனத்தார் கோவோவாக்ஸ் என்ற தடுப்பூசியை உருவாக்கியுள்ளனர். புனேவைச் சேர்ந்த இந்தியன் சீரம் நிறுவனம் இந்தியாவில் தடுப்பூசி தயாரித்து வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க தடுப்பூசி உற்பத்தி பணிகள் அங்கு தொடங்குகின்றன. சீரம் தலைமை நிர்வாக அதிகாரி பூனவாலா இந்த தகவலை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். செப்டம்பர் மாதத்தில் தடுப்பூசி கிடைக்கும் என்று பூனவாலா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.