தொடர்ச்சியான வருவாய் இழப்புகளால் நாடு முழுவதும் உள்ள அசையா சொத்துகளை ஏலம் விட ஏர் இந்தியா நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
நாடு முழுவதும் டெல்லி, கொல்கத்தா, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட 10 நகரங்களில் உள்ள 14 அசையா சொத்துக்களை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏர் இந்தியா நிறுவன அலுவலங்கள், ஊழியர்களுக்கான குடியிருப்புகளை வாங்க விரும்புவோர் ஜூலை 8, 9 ஆகிய தேதிகளில் www.airindia.in இணையதளத்தில் நடக்கும் ஏலத்தில் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.