சொத்துக்களை மறைத்துள்ளார்…. உதயநிதி ஸ்டாலின் மீது அதிமுக பிரமுகர் தேர்தல் ஆணையத்திடம் பகீர் குற்றச்சாட்டு

சென்னை,

சேப்பாக்கம்திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் உதயநிதி ஸ்டாலின் வரி ஏய்ப்பு செய்துள்ளார், சொத்துக்களை மறைத்துள்ளார் என்று அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் பகீர் குற்றச்சாட்டு வைக்கப்ப்டடுள்ளது.

இதன்மூலம் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக தரப்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஒருவேளை நடவடிக்கை எடுக்காவிட்டால் உயர் நீதிமன்றத்தை அணுகப் போவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுகிறார்.

இதையடுத்து அவர் தேர்தல் ஆணையத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். அந்த வேட்பு மனுவுடன் சொத்து விவரம் குறித்த பிரமாண பத்திரமும் தாக்கல் செய்தார். அதில் அவரது வருமானத்திற்கும் இருக்கும் சொத்துக்களுக்கும் சம்பந்தமில்லாதது போல இருப்பதாக அதிமுக தரப்பு குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் தரப்பில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு புகார் மனு வழங்கப்பட்டுள்ளது.

அதில் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ள சொத்து மதிப்பு மற்றும் அவரது வருமானம் ஆகியவற்றுக்கு இடையே ஏற்றத்தாழ்வு இருப்பதாகவும் சொத்து மதிப்புகளை சரியாக காட்டவில்லை என்றும் வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளதாக இதிலிருந்து தெரிகிறது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அது மட்டும் கிடையாது ஒருவேளை உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் சென்னை உயர் நீதிமன்றத்தை நாட போவதாக அந்த மனுவில் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பிரமாண பத்திரத்தில் மாறுபட்ட தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது வேட்பாளரின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு உரிய அம்சமாகும். எனவே உதயநிதி ஸ்டாலின் மீது அதிமுக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஏற்கனவே, ஜெயலலிதா மரணம் குறித்து உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஸ்டாலின் பேசக்கூடாது என, அதிமுக தரப்பில், தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஜெயலலிதா முதல்வராக இருக்கும்போது மரணம் அடைந்தார் என்பதால் அதுபற்றி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசுவோம் என்று உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Translate »
error: Content is protected !!