நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். முன்னதாக, நாடாளுமன்றம் வந்த ஜனாதிபதிக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து, நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் நிகழ்த்திய உரையில் கூறியது,
- பேரிடர்களை ஒற்றுமையாக கடந்து வந்திருக்கிறோம்.
- இந்தியா ஒன்றுபட்டு நின்ற போதெல்லாம் மீண்டு வந்திருக்கிறது.
- சவால்கள் எத்தனை பெரிதாக இருந்தாலும் இந்தியா ஒருபோதும் நின்று விடாது.
- நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து பல சவால்களை எதிர்கொண்டுள்ளோம்.
- கொரோனா காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது.
- ஊரடங்கு காலத்தில் உணவுக்காக சிரம்ப்படும் நிலை யாருக்கும் ஏற்படவில்லை
- கொரோனாவுக்கு எதிரான போரில் பல உயிர்களை இழந்துள்ளோம்.
- ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தால் பலர் பயன் அடைந்துள்ளனர்.
- லட்சக்கணக்கான கொரோனா தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.