மத்திய அரசிற்கு பின் இருந்து இயக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களால் தான் வேளாண் விரோத சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளின் போராட்டம் மறைக்கப்படுகிறது என்றும், எனவே விவசாயிகளுக்கு ஆதரவாக கார்பரேட் நிறுவனமான ஜியோ தொலைபேசி எண்ணிலிருந்து அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்க்கு தங்களது எண்ணை மாற்றம் செய்யும் போராட்டத்தினை இளைஞர்கள் தொடங்கினர். திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகத்தில் திரண்ட இளைஞர்கள் மற்றும் சமூக அமைப்பினர் ஆவணங்களை ஒப்படைத்து ஜியோ எண்களை பிஎஸ்என்எல் எண்களாக மாற்றிக் கொண்டனர்.
தமிழகத்தில் ஜியோ பயனாளர்கள் பாதிப்பேர் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு தங்களை மாறினால் விவசாயிகளின் குரல் நிச்சயம் கேட்கும் என்றும் இப்போ கேக்குதா என்ற ஹேஸ்டேக் உடன் தங்களது போராட்டத்தை முன்னெடுத்து உள்ளதாகவும் இளைஞர்கள் தெரிவித்தனர்.
இந்த விழிப்புணர்வு மூலம் பொதுத்துறை நிறுவனத்தையும் காக்க முடியும், குறைந்த பட்ச ஆதார விலை அந்த தள்ளுபடி செய்வதுடன், ஒப்பந்த முறையில் விவசாயம் செய்வதால் சந்தைகள் அறிந்து கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே விளை பொருட்களை சந்தைப்படுத்த முடியும் என்ற நிலை விரைவில் ஏற்படும் என்றும், கடந்த கால நிகழ்வுகளால் மத்திய அரசின் மீதான நம்பிக்கை இழந்த நிலையில் அவர்களுக்கு ஆதரவான நிலையில் இந்த போராட்டத்தை கையிலெடுத்து உள்ளதாகவும் தெரிவித்தனர்.