ஜூலை 22 முதல் இந்தியாவில் புதிய டெபிட், கிரெடிட் கார்டுகளை வழங்க மாஸ்டர்கார்டுக்கு ரிசர்வ் வங்கி தடை

மாஸ்டர்கார்டு மற்றும் விசா உள்ளிட்ட நிறுவனங்கள் பல்வேறு வங்கிகளுக்கு ஏடிஎம் மற்றும் கிரெடிட் கார்டுகளை வழங்குகின்றன.

ஏப்ரல் 6, 2018 அன்று, ரிசர்வ் வங்கி அத்தகைய நிறுவனங்களுக்கு ஒரு சுற்றறிக்கை வெளியிட்டது. அதில், 6 மாதங்களுக்குள், வாடிக்கையாளர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களும் பண பரிமாற்ற விவரங்களும் இந்தியாவில் மட்டுமே சேகரிக்கப்படுவதை நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது.

இந்த உத்தரவை மாஸ்டர்கார்டு ஏற்கவில்லை. இதன் விளைவாக, புதிதாக யாருக்கும் .டி.எம் கார்டு , கிரெடிட் கார்டு மற்றும் ப்ரீபெய்ட் கார்டு வழங்க மாஸ்டர்கார்டு நிறுவனத்துக்கு ரிசர்வ் வங்கி நேற்று தடை விதித்துள்ளது. இந்த தடை வருகிற 22 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும். அத்தகைய தடையை விதித்த 3 வது நிறுவனம் மாஸ்டர்கார்டு ஆகும்.

இருப்பினும், இது அதன் பழைய வாடிக்கையாளர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!