டி.ஆர்.டி.ஓ அக்னி-பிரைம் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) அக்னி ஏவுகணை வரிசையில், அக்னிபிரைம் என்ற புதிய ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. இன்று காலை 10.55 மணியளவில், ஒடிசாவின் கடலோரப் பகுதியில் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

அக்னிபிரைம் ஒரு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணை. இது அக்னி ஏவுகணைகளின் புதிய தலைமுறை மேம்பட்ட மாறுபாடாகும். இந்த அக்னிபிரைம் ஏவுகணை அணு ஆயுதத்தை சுமந்துசென்று தாக்குதல் நடத்தும் திறன் பெற்றதாகும்.

டிஆர்டிஓ அதிகாரிகளின் கூறுகையில், கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள பல்வேறு டெலிமெட்ரி மற்றும் ரேடார் நிலையங்கள் ஏவுகணையை கண்காணித்தன. திட்டமிட்ட முறையில் பயணித்த இந்த ஏவுகணை, திட்டத்தின் அனைத்து நோக்கங்களையும் அதிக துல்லியத்துடன் நிறைவேற்றியது. அக்னிபிரைம் ஏவுகணை 1,000 கிமீ முதல் 2,000 கிமீ வரை இலக்கை தாக்கும் திறன் கொண்டது என்று அவர்கள் கூறினர்.

 

Translate »
error: Content is protected !!