இந்தியாவில் “டெல்டா பிளஸ்” ‘கொரோனா வைரஸ்‘ குறித்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மத்திய அரசிடம் மூன்று கேள்விகளை முன்வைத்துள்ளார்.
பொருளாதாரம், கரோனா தடுப்பூசி, பல்வேறு திட்டங்கள் என மத்திய அரசின் கொள்கைகள், நடவடிக்கைகள் குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இதுபோன்று, ‘டெல்டா‘ வைரஸின் அடுத்த மாற்றப்பட்ட மாறுபாடு ‘டெல்டா பிளஸ்‘ குறித்து அவர் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பது,
கொரோனா பரவுவதைத் தடுக்க ‘டெல்டா பிளஸ்‘ வகை ஏன் பெரிய அளவில் சோதிக்கப்படவில்லை?இதற்கான தடுப்பூசிகள் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்? முழு தகவல் எப்போது கிடைக்கும்?மூன்றாவது அலைகளைக் கட்டுப்படுத்தும் திட்டம் என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.