டெல்லியில் விவசாயிகளின் போராட்டத்தினால் எல்லைகள் மூடப்பட்டு வாகன போக்குவரத்து கடும் பாதிப்பு

டெல்லியில் விவசாயிகளின் தொடர் போராட்டம் எதிரொலியாக எல்லைகள் மூடப்பட்டு வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது

டெல்லியில் கொரோனா பாதிப்புகள், கடும் குளிர், காற்று மாசு ஏற்பட்டு காற்றின் தர குறியீடு மிக மோசமடைந்த பிரிவில் உள்ளது மற்றும் விவசாயிகளின் போராட்டம் ஆகியவற்றால் கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது.

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவற்றை வாபஸ் பெற கோரி விவசாயிகளில் ஒரு பிரிவினர் கடந்த ஆண்டு நவம்பர் 26ந்தேதி டெல்லி சலோ என்ற பெயரில் டெல்லி நோக்கி டிராக்டர்களில் பேரணியாக புறப்பட்டு சென்றனர்.

அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் இருந்து வந்த விவசாயிகளுடன் வேறு சில மாநில விவசாயிகளும் பின்னர் இணைந்து கொண்டனர்கடந்த 2 மாதங்களுக்கும் கூடுதலாக போராட்டம் தீவிரமடைந்து உள்ளதுதிக்ரி மற்றும் சிங்கு எல்லையில் இந்த போராட்டம் 68வது நாளாக இன்றும் தொடர்ந்து நீடித்து வருகிறது.

டெல்லி மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களை இணைக்கும் காசிப்பூர் எல்லையில் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து வருகிறதுஇதனை முன்னிட்டு, நொய்டாவுக்கான வாகன போக்குவரத்து டெல்லி அக்சர்தம் பகுதியில் திருப்பி விடப்பட்டு உள்ளது.

விவசாயிகளின் போராட்டம் எதிரொலியாக எல்லைகள் மூடப்பட்டு வாகனங்கள் வேறு வழியில் திருப்பி விடப்படுவதனால், டெல்லியில் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு வாகன நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.

இதுபற்றி டெல்லி வாகன போக்குவரத்து போலீசார் கூறும்பொழுது, .எஸ்.பி.டி. ஆனந்த் விகார் பகுதியில் இருந்து காசிப்பூர் செல்வதற்கான சாலை எண் 50ல் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படும்அக்சர்தம் பகுதியில் கடுமையான வாகன நெருக்கடி ஏற்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.

 

Translate »
error: Content is protected !!