டெல்லியைச் சேர்ந்த செல்வி.ரிங்கி குமாரி (வயது 28) மனநலம் பாதிக்கப்பட்டு ஒரு வருட காலமாக (15 மாதம்) தொலைந்த நிலையில் தன் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டார்.
சென்னையில் இயங்கி வரும் ஆஸ்பைரிங் லைவ்ஸ் தொண்டு நிறுவனம், மனநலம் பாதிக்கபட்டு தொலைந்தவர்களை அவர்களின் குடும்பங்களை கண்டறிந்து ரீயூனியன் செய்து வைத்துக் கொண்டிருக்கிறது, இதுவரை இந்தியா முழுக்க நூற்றுக்கும் மேற்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டவர்களை சேர்த்திருக்கிறது, அந்த வகையில் ரிங்கி குமாரி, கேரளாவில் எஸ்.எஸ். சமீதி என்ற மனநல காப்பகத்தில் இருந்து வந்தார்.
ஆஸ்பைரிங் லைப்ஸ் நிறுவனர் செல்வி. ஃபாரிஹா சுமன் மற்றும் நிர்வாக அரங்கவாளர் திரு. மனிஷ் குமார், ரிங்கி குமாரியிடம் ஒரு சில தகவலை பெற்று கொண்டு, இவரின் குடும்பத்தை கண்டறிந்தனர். கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக ரிங்கியின் பெற்றோர் டெல்லியில் தேடி வந்துள்ளனர், காவல் நிலையத்திலும் தகவல் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் ரிங்கியை பற்றி தகவலை அறிந்த பெற்றோர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர், அதை தொடர்ந்து தந்தை தன் மகளை அழைத்து செல்ல காப்பாகத்துக்கு வந்தார். பிப்ரவரி 24, 2021 இல் ரீயூனியன் நன்முறையில் நடைப்பெற்றது. தந்தையிடம் போதுமான ஆவணங்கள் பெற்றுக்கொண்டு ரீயூனியன் சென்னையில் நடைபெற்றது. தந்தை மிகுந்த மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.