மகாராஷ்டிரா, டெல்லி, ஹரியானா மற்றும் உத்தரபிரதேசம் உள்ளிட்ட 4 வட மாநிலங்களில் மழை பெய்துள்ளது. இந்த பெய்த கனமழையால் டெல்லியின் ஐடிஓ பகுதியில் வெள்ள நீர் சாலைகளில் நிரம்பி வழிந்தது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். மேலும் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.