டெல்லி முதலமைச்சர் மகளிடம் ஆன்லைன் மூலம் ரூ. 34,000 பணம் மோசடி…போலீசார் மோசடி கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்

புதுடெல்லி,

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதா வங்கி கணக்கில் இருந்து ஆன்லைன் மூலம் ரூ. 34,000 பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதா பழைய சோபா ஒன்றை விற்பனை செய்வதற்காக பிரபல விற்பனை தலமான ஓஎல்ஸ்க்ஸில் (OLX) விளம்பரம் கொடுத்துள்ளார். இதனை பார்த்த மோசடி கும்பல் ஒன்று ஹர்ஷிதாவை அணுகி சோபாவை வாங்குவதாக கூறியுள்ளது.

ஹர்ஷிதாவின் வங்கி கணக்கின் விவரத்தை பெற்று அவரின் நம்பிக்கையை பெறுவதற்காக சிறிய அளவு பணத்தை செலுத்தியுள்ளனர். பின்னர் QR code ஒன்றை அனுப்பி அதன் மூலம் ஹர்ஷிதாவின் வங்கி கணக்கில் இருந்து 34,000 ரூபாய் பணத்தை மோசடி கும்பல் திருடியுள்ளது.

தான் ஏமாற்றப்பட்டது குறித்து டெல்லியில் காவல் நிலையத்தில் ஹர்ஷிதா  புகார் அளித்துள்ளார். புகாரை தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் மோசடி நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தின்மூலம், பொதுமக்கள் ஆன்லைன் திருடர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறும், வங்கி கணக்கு எண், பாஸ்வேர்ட் ஆகியவற்றை தெரிவிக்க வேண்டாம் எனவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

 

Translate »
error: Content is protected !!