தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா? வரும் 28ம் தேதி முதல்வர் ஆலோசனை

கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் அமலான ஊரடங்கு உத்தரவில் மேலும் தளர்வுகளை அறிவிக்கலாமா என்பது குறித்து, மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மருத்துவ நிபுணர் குழுவிடம் வரும் 28ம் தேதி, முதல்வர் பழனிச்சாமி ஆலோசனை நடத்துகிறார்.

கொரொனா பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதத்தில் ஊரடங்கு கடுமையான நிபந்தனைகளுடன் விதிக்கப்பட்டது. கொரோனாவின் தாக்கம் குறையத் தொடங்கியதும், பல கட்டங்களாக ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது.

அவ்வகையில், வரும் 30ம் தேதியுடன் நடப்பு ஊரடங்கு உத்தரவு என்பது முடிவுக்கு வர உள்ளதால், கொரொனா சூழல் காரணமாக அதை டிசம்பர் மாதம் வரை நீட்டிப்பதா, அல்லது கூடுதல் தளர்வுகளை அறிவிக்கலாமா என்று தமிழக அரசு பரிசீலிக்க உள்ளது.

இது தொடர்பாக, வரும் 28ம் தேதி மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்.

அதன் அடிப்படையில், ஊரடங்கு தளர்வு இருக்குமா அல்லது புதிய கெடுபிடிகள் இருக்குமா என்பது தெரிய வரும்.

Translate »
error: Content is protected !!