தமிழக சட்ட பேரவைக்கு ஏப்ரல் மாதம் 6ம் தேதி தேர்தல் நடைபெறும் – சுனில் அரோரா

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் பரப்புரை குறித்து புதிய அறிவிப்புகள்  வெளியிடப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையர் சுனில் அரோர இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,தமிழக சட்டமன்ற தேர்தல் 2021 தேதிகளை அறிவித்தார்.

வாக்குப்பதிவு நாள் – ஏப்ரல் 6

வேட்புமனு தாக்கல் தொடங்கும் நாள் – மார்ச் 12

வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள் – மார்ச் 19

வேட்புமனு மீதான பரிசீலனை – மார்ச் 20

வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள் – மார்ச் 22

வாக்கு எண்ணிக்கை நாள் – மே 2

  • வேட்புமனு தாக்கல் செய்யும் பொழுது இரண்டு பேர் மட்டுமே உடன் வரவேண்டும், வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகத்திற்கு இரண்டு வாகனங்கள் மட்டுமே அனுமதி.
  • வீடு வீடாக பிரச்சாரம் மேற்கொள்ளும் போது 5 பேர் மட்டுமே செல்ல வேண்டும். வாக்கு பதிவு செய்ய ஒரு மணி நேரம் கூடுதல் ஒதுக்கிடு.
  • வாக்குப்பதிவு மையங்களில் இருக்கும் அனைத்து அதிகாரிகளுக்கும் கொரோனா தடுப்பூசி.
  • வேட்பாளர்களின் அதிகபட்ச செலவு தொகை 30 லட்சமாக நிர்ணயம்.
  • குற்றப் பின்னணி உள்ள வேட்பாளர்கள் அதன் விவரங்களை ஊடகங்களில் வெளியிட வேண்டும்..
  • சென்னையில் தேர்தல் நடத்தை விதிகள் அமல், 24 மணிநேரத்திற்குள் பதாகைகள், கொடிகள் அகற்றப்பட வேண்டும் – மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்.

புதுச்சேரியிலும் 30 தொகுதிகளுக்கும் ஏப்.6 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. கேரள மாநிலத்திலும் 140 தொகுதிகளுக்கு ஏப்.6 ல் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு.

 

 

 

 

 

Translate »
error: Content is protected !!