திமுகவை வீழ்த்த கையில் எடுக்கும் அடுத்த திட்டம்..! பாஜகவின் ஆதிக்கம் அதிகமாகவே இருப்பதாக தகவல்

சென்னை,

புதுச்சேரி அரசியல் மிகப்பெரிய பாடத்தை புகட்டி கொண்டிருக்கிறது.. அந்த அரசியல் அப்படியே ஷிப்ட் ஆகி தமிழ்நாட்டுக்குள்ளும் வர போகிறது. அப்படி ஒரு சாதுர்ய நகர்வை பாஜக கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. புதுச்சேரியில் நாளுக்கு நாள் புது புது திருப்பங்கள் ஏற்பட்ட வருகின்றன.

திடீர் திடீர் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. 5 வருடம் பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு, கடைசி நேரத்தில் இன்னொரு கட்சிக்கு தாவுவதையும் கண்கூடாக பாரக்க முடிகிறது. தேர்தலில் போட்டியிடாமலேயே பதவியை கொக்கி போட்டு இழுக்கும் புதுமையையும் பார்க்க முடிகிறது. இதற்கெல்லாம் ஒரே காரணம் பாஜக.

இப்படி ஒரு அதிரடியை கையில் எடுக்க காரணமே அமித்ஷாதானாம். இதே போலதான் தமிழ்நாட்டிலும் அமித்ஷாவின் வியூகம் ஆரம்பமாகும் என்ற தகவல் கசிந்து வருகிறது. கட்சி தாவல், திடீர் ஆதரவு, திடீர் விலகல் இதெல்லாம் வழக்கமாக தேர்தல் சமயத்தில் நடக்கக்கூடியதுதான். இந்தமுறையும் அதற்கான வாய்ப்புகள் இருந்தாலும், பாஜகவின் ஆதிக்கம் அதிகமாகவே இருப்பதாக கூறப்படுகிறது.

 

எப்போதுமே திமுகதான் பாஜகவுக்கு முதல் குறி, இது சம்பந்தமாக 2 வருடமாகவே பல பிளான்கள் போடப்பட்டு வருகின்றன. அதில் ஒருசில பிளான்கள் கைகொடுத்தன. அந்த கட்சியை டேமேஜ் செய்தாலே அதிமுக கூட்டணி வெற்றி பெற்றுவிடும் என்பது அதன் ஆழமான கணிப்பு. தேசிய அரசியலிலும் ஸ்டாலின் வந்துவிடக்கூடாது என்பதிலும் கவனமான வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.

இதற்காகவே திமுகவை தோற்கடிக்க வேறு பல யோசனைகளிலும் பாஜக ஈடுபட்டு வருகிறது. அதில் ஒன்றுதான், திமுகவின் வாக்கு வங்கிளை பிரிப்பது. பாஜகவால் நோட்டாவை தாண்ட முடியாத நிலையில், திமுகவுக்கு செல்லும் வாக்குகளை பிரிக்கும் முயற்சிகளைதான் தற்போது கையில் எடுத்துள்ளது.

ஆனால், தனித்து போட்டி என்பது இப்போதைக்கு பாஜகவால் சாத்தியம் இல்லை என்றாலும், ஒருசில தன்சார்பு கட்சிகளை கூட்டணி அமைத்து போட்டியிட வைக்கும் முயற்சியில் இறங்கலாம் என தெரிகிறது. தனித்து போட்டி என்று தினகரன் சொல்லி கொண்டிருக்கிறார். இந்த பக்கம் கமல் சொல்லி கொண்டிருக்கிறார்.

அந்த பக்கம் பிரேமலதா சொல்லி கொண்டிருக்கிறார்.. ஆல்ரெடி சீமான் தனித்தே களமிறங்கிவிட்டார். எனவே, இதுபோன்றவர்களில் யாரையாவது மையப்படுத்தி அல்லது இவர்களில் ஒருசிலரை இணைத்து கூட்டணி வைத்து தேர்தலை சந்திப்பது என்பதுதான் அமித்ஷாவின் திட்டமாம

இதில் யார் யார், யாருடன் கூட்டணி அமைப்பார்கள்? அதற்கான அசைன்மென்ட் என்ன? என்பது தெரியவில்லை. ஒருவேளை இது உண்மை என்றால், அதிமுக தனித்துதான் போட்டியிடும்.. திமுகவை சமாளிக்க அதிமுகவால் தனித்து முடியும என்பது மிகப்பெரிய கேள்விதான்.

 

பாஜக போடும் இந்த கூட்டணி கணிப்பில் பாமகவும் இணையலாம். அந்த கட்சியும் இழுபறியில் இன்னும் உள்ளதாலும், பாஜகவுடன் இணக்கமான போக்கு பாமகவுக்கு இருக்கிறது என்பதாலும், நிறைய சான்ஸ் உள்ளதாக கூறப்படுகிறது

இதெல்லாம் எந்த அளவுக்கு ஒர்க் அவுட் ஆகும் என்று தெரியவில்லை. ஆனால், தேர்தலுக்கு தேர்தலுக்கு மாசம் இருக்கும்போது, மாநில முதல்வரையே வீட்டுக்கு அனுப்ப பாஜகவால் முடிகிறது என்றால், தமிழகத்திலும் எதுவேண்டுமானாலும் நடக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

அனைத்தையும் கவனித்து கொண்டிருக்கும் மக்கள்தான், நல்ல முடிவை யோசித்து எடுப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நேரத்தில் திருமாவளவன் சொன்னதைதான் இங்கு சொல்ல வேண்டி உள்ளது. “புதுச்சேரியில் நடந்தது ஒரு ரிகர்சல்தான்.. தமிழ்நாட்டில் தேர்தலுக்குப் பிறகு இன்னும் என்னென்ன கூத்துகள் நடக்க இருக்கிறதோ“!

Translate »
error: Content is protected !!